பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள்தொடங்கியது. இந்த போட்டி “பாக்சிங் டே” என்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 3 விக்கெட்களையும், பும்ரா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிக பட்சமாக கேப்டன் ரஹானே 112, ஜடேஜா 57 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. மேத்யூ வேட் 40 ரன்கள், மார்னஸ் லபுஸ்சேன் 28 ரன்கள் எடுக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அணைத்து விக்கெட்களையும் இழந்து, 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி வெற்றி பெற வெறும் 70 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி அந்த எளிய இலக்கான 70 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே