பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆட்களை விஜய் டிவி நிர்வாகம் எப்போதே தேர்வு செய்து விட்டதாகவும், எப்போதுமே ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருக்கலாம் எனவும் தெரிகிறது.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் வழங்க உள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் கமலஹாசன் இந்த சீசனில் முழுவதும் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் தான் பேசுவார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிட்டது.
இதனாலேயே நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விடுமோ என விஜய் டிவி நிர்வாகம் அஞ்சுகிறதாம். இருந்தாலும் கமல்ஹாசனை தவிர வேறு யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என்ற மாயையை ஏற்படுத்தி விட்டார்கள். வேறு வழியில்லாமல் மீண்டும் கமலஹாசனை தேர்வு செய்து விட்டது விஜய் டிவி.
ஆனால் கடந்த முறை 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்கிறாராம். அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது சென்று கொண்டிருப்பதாக அவரின் மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.