பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இன்றைய தினம் பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது.

சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது.கொரோனா எனும் உலகளாவிய தாக்கத்தால் பொருளாதாரம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மெல்ல முன்னேறி வருகிறது.

இந்தச்சூழலில் மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று(பிப்., 1) தாக்கலாகிறது.

இதன் மீதான எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகளில் வர்த்தகவாரத்தின் முதல்நாளிலேயே அதிகம் ஏற்றம் கண்டன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 443.06 புள்ளிகள் உயர்ந்து 46,728.83 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 114.85 புள்ளிகள் உயர்ந்து 13,749.45ஆகவும் வர்த்தகமாகின.

கடந்த 6 தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் இன்றைய பட்ஜெட்டை எதிர்பார்த்து உயர்வுடன் வர்த்தகமாகின. 

தொடர்ந்து காலை 10.40 மணியளவில் சென்செக்ஸ் 438, நிப்டி 108 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் ஐசிஐசிஐ., எச்டிஎப்சி, ஓஎன்ஜிசி, டைட்டன் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே