அன்டோனோவ் -26 என்ற சரக்கு விமானத்தில் சில இராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த விமானம் சுஜுவ் நகரில் இருந்து புறப்பட்டது. இரண்டு எஞ்சின் கொண்ட அந்த விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதானதை அறிந்து 2 கி.மீ தொலைவை அடைந்ததும் கீழே இறக்க முற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானம் நடுவானில் தீபிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

அப்போது சில இராணுவ வீரர்கள் கீழே குதிக்க முற்பட்டுள்ளனர். மேலும், சிலர் அந்த விமானத்துடன் கீழே விழுந்துள்ளனர். இதில் சம்பவ இடத்தில் 25பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விமானத்தில் மொத்த 27 பேர் பயணித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இது அதிர்ச்சி தரும் விபத்து” என்று துணை உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.

விபத்து பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்திற்கு முன் இஞ்சின் செயலிழந்ததால் விமானி ஒருவர் தடுமாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கிழக்கு உக்ரைனில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த விமானம் தாக்கப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று விபத்து நடந்த இடத்தை பார்வை இட செல்கிறார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே