பீகார் சட்டப்பேரவை தேர்தல் : தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை..!!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், தற்போது பெரும்பான்மையை நோக்கி பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னேறியுள்ளது.

இதுவரை இரண்டு கூட்டணிகளுமே 110 என்ற இடங்களிலேயே ஓரிரு தொகுதிகள் முன்னும் பின்னுமாக முன்னிலை வகித்து வந்த நிலையில், 11 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னிலை நிலவரம்

கட்சிகள்முன்னிலைவெற்றிமொத்தம்
பாஜக – ஐக்கிய ஜனதா தளம்13100131
காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம்10000100
லோக் ஜன சக்தி060006
பிற வேட்பாளர்கள்060006


பிகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறத்தொடங்கியது முதல் இதுவரை இழுபறி நீடிக்கும் என்று கருதிய நிலையில், ஒரு பெரிய மாற்றமாக, பாஜக 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பிகாரில் பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே