இனி வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
 வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயுவை புக் செய்ய என்ற ‘7588888824‘  எண்ணுக்கு (ரீபில்) Refill என்று செய்தி அனுப்ப வேண்டும். இதனை தாண்டி ஒரு செய்தி மூலம் சிலிண்டர் விநியோகம் செய்த கட்டணம், எண், எடை, நம்பகத்தன்மை போன்ற அனைத்தும் வாட்ஸ்அப்பிளேயே கிடைக்கும் அளவிற்கு வசதிகள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


 
							