இந்திய சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமர்சையாக நடைபெற்றது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். அந்த வகையில்,
இந்தியா 74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை ஒட்டி அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் முதன் முறையாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்திய தூதரக அதிகாரியான ரந்தீர் ஜெய்ஸ்வால் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய – அமெரிக்க நட்பின் அடையாளமாக விளங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது என்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள The Federation of Indian Associations (FIA) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.