டிக்டாக் தலையில் மீண்டும் ஒரு ‘டொக்’..! டிரம்ப் அதிரடி… கலங்கும் சீனா…!

வாஷிங்டன்: 90 நாட்களில் அமெரிக்காவில் உள்ள சொத்துகளை விலக்கி கொள்ள வேண்டும் என்று டிக்டாக்கிற்கு அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

உலகளவில் மிகவும் பிரபலமான செயலி டிக்டாக். கொரோனா காரணமாக, சீனா, அமெரிக்கா இடையே கடும் கருத்து முரண்கள் எழுந்தன. அது தவிர டிக்டாக்கானது அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை சீன அரசுக்கு அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் எதிரொலியாக அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்து டிரம்ப் உத்தரவிட்டார்.இந்த நிறுவனத்தை அமெரிக்காவை சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கலாம், செப். 15 வரை அவகாசம் என்றும் கூறி இருந்தார்.

அதற்கான தடை விதிக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுவிட்டார். இந் நிலையில், புதிய உத்தரவு ஒன்றை அவர் இப்போது அறிவித்து உள்ளார். அதாவது 90 நாள்களில் டிக்டாக் நிறுவனமானது தமக்கு சொந்தமான அமெரிக்க சொத்துகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அதிபர் டிரம்பின் இந்த உத்தரவால் டிக்டாக் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே