12-ஆம் வகுப்பு மாணவர்கள் சான்றிதழ் பெறுவதற்கான கட்டுப்பாட்டு விதிமுறை : தமிழக அரசு வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. ஆனால் மறுகூட்டல் , மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள்களை பெறுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் அரசு தேர்வுகள் துறை அவை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வாயிலாகவும் மறுகூட்டல் மறுமதிப்பீடு விடைத்தாள் நகல்களை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆன்லைனில் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல்களை பெற்ற பின்னரே மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் பெற 275 ரூபாயும் மறுமதிப்பீட்டிற்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும் இதர பாடங்களுக்கு மாணவர்கள் 205 ரூபாய்கட்டணம் செலுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் படிவத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பாடங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும்.

அந்த விவரங்களைக் கொண்டு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே