உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தி இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக 90,802 பேர் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:-

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 90,802 பேர் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,04,614 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,016 பேர் இறந்துள்ளனர். இதனால்,மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்தது.

கொரோனா பதிப்பில் இருந்து ஒரே நாளில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 32,50,429 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,82,542 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே