இந்தியா – சீனா மோதிக்கொண்டால் பிற நாடுகள் அரசியல் செய்யும்..!!

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல்போக்கு தொடர்ந்து நீடித்த வண்ணம் உள்ளது.

முன்னதாக கல்வான் பகுதியில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து இருநாடுகளும் அவ்வப்போது மோதிக்கொண்டன.

தற்போது இதில் ரஷ்யா தலையிட்டுள்ளது.

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நாடுகளான சீனாவும் இந்தியாவும் மோதிக்கொள்வது ஒருங்கிணைந்த ஆசிய மற்றும் ஐரோப்பிய பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ரஷ்ய துணை தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளும் எல்லைப்பகுதியில் போர் புரிவதை கைவிட்டுவிட்டு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 

சீனா-இந்தியா ஆகிய இரு நாடுகளுமே எஸ்சிஓ மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்த இரு நாடுகளும் மோதிக் கொண்டால் மற்ற நாடுகள் இதனை வைத்து அரசியல் செய்ய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் கட்டாயம் ஈடுபடவேண்டும். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் இது குறித்து விரிவாக பேசவேண்டும்.

கடந்த ஆறு மாதமாக லடாக் பகுதி மூடப்பட்டுள்ளது. இரு நாடுகளுமே பொருளாதாரம், கலாச்சாரம், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்த நாடுகள்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் குழுமம் ஆகிய இரு அமைப்புகளும் இந்த எல்லை விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கும் உள்ள பிரச்னையை தீர்த்துவைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே