பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கால் நான் பாலியல் வன்கொடுமைக்குள்ளானேன் – அமெரிக்க எழுத்தாளர்

அமெரிக்கா எழுத்தாளரான சிந்தியா. டி. ரிச்சி, பாகிஸ்தானை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 2011ல் ரெஹ்மான் மாலிக் என்ற அப்போதைய உள்துறை மந்திரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் தன்னை உடல் ரீதியாக அப்போதைய பிரதமரான யூசப் ராசா கிலானி பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நான் கூறும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், விரைவில் அதை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

9ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டுகளுடன் வெளியான இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே