தந்தையின் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை – நடிகர் விஜய்

அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுவதாகவும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டு தகவல் வெளியானது.

கட்சி தலைவராக பத்மநாபன் என்பவரும் பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக ஷோபாவும், கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் சற்று முன் நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றிலும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

என் தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக எனது ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் எனது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது இயக்கத்தையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் நடிகர் விஜய் எச்சரித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே