விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என விஜயின் பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார்.

இதுநாள் வரை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருந்த அமைப்பு, தற்போது கட்சியாக மாறியுள்ளது என்றும்; கட்சியின் பெயரை, நடிகர் விஜய் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளாகவும் இணையத்தில் செய்தி பரவியது.

அதே போல், கட்சி தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்தக் தகவல் பொய்யானது என விஜயின் பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே