இப்படி ஒரு அழிவை நான் பார்த்து இல்லை… கண்ணீர் மல்க பேசிய லெபனான் பிரதமர்..!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன. சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,700 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிவிபத்துக்கு குடோனில் வைக்கப்பட்ட 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் தான் காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவம் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியைத் தான் எனக்கு நினைவுப்படுத்துகிறது. என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு அழிவை நான் பார்த்து இல்லை எனத் தெரிவித்தார்.

அப்போது தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஆளுநர் கண் கலங்கி அழுதார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே