இதை விட பெரிய அசிங்கம் திமுகவிற்கு உலகத்திலேயே இருக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக நடத்திய பேரணியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும்; இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய அசிங்கம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில்
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய பேரணியில் 108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் கூட்டம் கூடவில்லை என்றும்;

காவல்துறையினரின் கூட்டத்தைவிட பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு என தெரிவித்தார்.

5000 பேர் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டது திமுகவிற்கு மிகப்பெரிய கேவலம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திமுக பேரணியில் வன்முறை ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே