மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை : தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை என்று சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் சார்பில், இந்தியாவின் சிறந்த இளம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

இதில், தமிழகத்திலிருந்து சிறந்த இளம் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரிக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதை நாகப்பட்டினம் மக்களுக்கும், மனித நேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வரும் 29ம் தேதி கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்த அவர், மனித நேய ஜனநாயக கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே