மணக்க மணக்க வீட்லயே எப்படி மசால் வடை பண்ணலாம்

கட்லே பேலே அம்போட் என்பது கர்நாடகாவின் ரெசிபி ஆகும். இது மசாலா வடை, தால் வடை அல்லது பருப்பு வடை என்றும் அழைக்கப்படுகிறது..
முக்கிய பொருட்கள்
1 கப் இரவு ஊறவைத்த கடலை பருப்பு
பிரதான உணவு
1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
தேவையான அளவு மஞ்சள்
தேவையான அளவு நறுக்கிய கறிவேப்பிலை
தேவையான அளவு நறுக்கிய புதினா இலை
தேவையான அளவு நறுக்கிய பச்சை மிளகாய்
1 inch துருவிய இஞ்சி
தேவையான அளவு உப்பு
How to make: மணக்க மணக்க வீட்லயே எப்படி மசால் வடை பண்ணலாம்
Step 1:
ஒரு மிக்சியில் ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் பொழுது பருப்பை முற்றிலுமாக அரைக்காமல், கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
Step 2:
பின்பு அரைத்து வைத்துள்ள கலவையில் கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், துருவிய இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
Step 3:
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில், வடை மாவை தட்டி எண்ணையில் போடவும். வடை பொன்னிறமாக மாறும் வரை இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை நன்றாக சமைத்து எடுக்கவும்.
Step 4:
சுட்டு எடுத்த வடையை சூடாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி மகிழவும். சூடாக சாப்பிடும் போது வடை இன்னும் ருசியாக இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து வடையை பரிமாறலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே