கொரோனா தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டு இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 10,000 பேர்!

அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகரின் இறுதிச் சடங்கில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 6,73,165 பேர் பாதிக்கப்பட்டு, 19,268 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் 10,668 பேர் பாதிக்கப்பட்டு, 14 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அனைத்திந்திய ஜமாத் உல்மா அமைப்பின் துணைத் தலைவர் கைருல் இஸ்லாம் (87 வயது) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவருடைய மகன் அமினுள் இஸ்லாம் எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துவருகிறார்.

அவருடைய இறுதிச் சடங்கு ஜூலை 2ம் தேதி நடந்தது. 

அன்று நடந்த இறுதிச் சடங்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி இத்தனை மக்கள் கலந்துகொண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் இத்தனை மக்கள் ஒன்று கூடியது மக்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, காவல்துறை மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியன தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துளனர்.

இறுதிச் சடங்கு நடைபெற்ற நாகோன் மாவட்டத்தில் மூன்று கிராமங்களை முழுவதுமாக அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே