ட்ரூ காலரில் இருந்து உங்கள் மொபைல் நம்பரை டெலிட் செய்வது எப்படி? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே?

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரூகாலர் டிப்ஸ் இது. உங்கள் தொலைபேசி எண்ணை ட்ரூ காலர் ஆப்பில் இருந்து அகற்றுவது எப்படி, இதோ எளிய வழிமுறைகள்.
ட்ரூ காலர் ஆப் – அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது. இந்த ஆப் பயனர்கள் வழங்கிய “சரியான அனுமதிகளுடன்” அறியப்படாத அழைப்பாளரிடமிருந்து உள்வரும் அழைப்பை தானாகவே ஸ்கேன் செய்து, அழைப்பை எடுப்பதற்கு முன்பே அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்.
அதெப்படி உங்களின் போனில் சேமிக்கப்படாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு போது, அது ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு நம்பரை போல் காட்டுகிறது? ஏனெனில் குறிப்பிட்ட எண்களை பற்றிய தகவல் சேகரிப்பை நிகழ்த்த ட்ரூகாலர் ஆப் ஆனது பயனர்களின் போன் காண்டாக்ட்களை நம்பியுள்ளது.
நீங்கள் இந்த பயன்பாட்டை நிறுவவில்லை என்றாலும் கூட, உங்களின் எண்களை பற்றிய தொடர்பு விவரங்கள் ட்ரூகாலரில் கிடைக்கின்றன, ஏனெனில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தும் எவரோ ஒருவர் உங்கள் தொலைபேசி எண்ணை அவரது போனில் சேமித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, ட்ரூ காலர் ஆப் ஆனது அதன் தரவுத்தளத்திலிருந்து உங்களின் மொபைல் எண்ணை அன்லிஸ்ட் (பட்டியலிடப்படுவதை நீக்குவதற்கான) வசதியை வழங்குகிறது. இருப்பினும், அதைச் செய்ய, மக்கள் தங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

எனவே, உங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும், உங்கள் தொலைபேசி எண்ணை தரவுத்தளத்திலிருந்து அன்லிஸ்ட் செய்வதற்கும் நீங்கள் உறுதியாக இருந்தால், கீழ்வரும் எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும்:

உங்கள் Truecaller அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்:

  1. உங்கள் தொலைபேசியில் ட்ரூகாலர் பயன்பாட்டைத் திறக்கவும்
  2. மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானை (iOS இல்) கிளிக் செய்யவும்
  3. செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும், ப்ரைவஸி சென்டருக்குள் செல்லவும்
  4. இப்போது, டிஆக்டிவேட் பட்டனை கிளிக் செய்யவும்
  5. உறுதிசெய்ய ‘யெஸ்’ என்பதை கிளிக் செய்வதின் உங்களின் ட்ரூ காலர் அக்கவுண்ட்டை செயலிழக்க வைக்கலாம், அவ்வளவுதான்!
    ட்ரூகாலரில் இருந்து உங்கள் தொலைபேசி எண்ணை அகற்றுவதற்கான வழிமுறைகள்:
  6. ஏதேனும் ஒரு ப்ரவுஸர் வழியாக https://www.truecaller.com/unlisting என்பதை திறக்கவும்
  7. உங்கள் நாட்டின் குறியீட்டைக் கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
  8. பின்னர் அன்லிஸ்ட் போன் நம்பர் பட்டனை கிளிக் செய்யவும், அவ்வளவுதான்!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே