முட்டைகோஸ் வாசனையே வராம எப்படி பொரியல் பண்ணலாம்.

ரொட்டி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு ஏற்ற முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா? பொதுவாக வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா செய்யப்படுறது தான் சப்ஜி. வீட்டில் இருக்கும் சிம்பிளான காய்கறிகள் மசாலாக்களை வெச்சு முட்டைகோஸ் சப்ஜி எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க!அறிமுகம்முட்டைகோஸ் பட்டாணி மசாலா செய்வதற்கு மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. இதற்கு பட்டாணியும் நறுக்கிய முட்டைகோஸும் தேவை. இந்த இரண்டு முக்கியமான பொருட்களை சில அடிப்படை இந்திய மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து வேகவைக்கப்படும்போது அது முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகிறது. இந்த சுவையான சைட் டிஷ்ஷை சப்பாத்தி, ரொட்டி, சாதம் மற்றும் பராத்தாவுடன் சாப்பிட பொருத்தமானது. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க? இந்த சுவையான ரெசிப்பியை எப்படி எளிமையாக தயாரிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க!

முக்கிய பொருட்கள்
250 கிராம் நறுக்கிய முட்டைக்கோசு
1 கப் பட்டாணி
2 கப் தக்காளி சாறு
பிரதான உணவு
தேவையான அளவு மஞ்சள்
தேவையான அளவு மிளகாய் பொடி
1 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
1 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு உப்பு
1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
1 தேக்கரண்டி நறுக்கிய பச்சை மிளகாய்
How to make: முட்டைகோஸ் வாசனையே வராம எப்படி பொரியல் பண்ணலாம்.
Step 1:
முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கோங்க. நறுக்கிய முட்டைகோஸை ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்துக்கோங்க.
Step 2:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்குங்க. அதில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடேறினதும் கடுகை போட்டு தாளித்து, கடுகு வெடிக்கும் வரை வெயிட் பண்ணுங்க. கடுகு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை அதில் சேர்த்துக்கோங்க. இப்போ அந்த வாணலில நறுக்கிய முட்டைகோஸை போட்டு 4 முதல் 5 நிமிடம் வதக்குங்க.
Step 3:
முட்டைகோஸ் மென்மையாகும் வரை வேகவிட்டு அப்பறமா அதில் பட்டாணியை சேர்த்துக்கோங்க. தீயை சிம்மில் வைத்து ஆர்கானிக் உப்பையும் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வேகவிடுங்க.
Step 4:
2 நிமிடங்கள் கழிச்சி மூடியை திறந்து தக்காளி ப்யூரியை அதில் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விடுங்க. பிறகு குறைந்த தீயில் இந்த கலவையை 5 முதல் 6 நிமிடங்கள் வேகவிடுங்க.
Step 5:
காய்கறிகள் வெந்ததும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து மூடியால் மூடி இன்னும் ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்க. இப்போ மூடியை திறந்து எல்லா காய்கறிகளையும் நல்லா கிளறிவிட்டு 2 நிமிஷம் அதிகமான தீயில் வைச்சு வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்குங்க. நம்மோட முட்டைகோஸ் பட்டாணி மசாலா ரெடி! இதை கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிச்சு ரொட்டி அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே