மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் மாதமான பங்குனியில் உத்திர நட்சத்திரம் கூடிவரும் பவுர்ணமி நாள் பங்குனி உத்திரத் திருநாளாகும்.

தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் சிறப்புமிக்க பங்குனி உத்திரம் திருநாளிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்: தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான “பங்குனி உத்திரம்” திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்! எனப் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே