அதிமுகவை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் – ராமநாதபுரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பிரச்சாரம்..!!

பொய் பரப்புரை செய்து வரும் அதிமுக, பாஜகவினர்களை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தரமான சாலைகளை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேம்பட சுழல் நிதி வழங்க வழிவகை செய்வேன் என உறுதியளித்தார்.

இதனையடுத்து, தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக, பாஜகவினர்களை என் தொகுதி மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என இராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதோடு தரமான சாலை வசதிகளை அமைத்து தருவேன் என்றும்; பொதுமக்களின் கோரிக்கைகளான ரேசன்கடைகளை அமைத்து தருவேன் என்றும் வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே