இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 576 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,800-க்கு விற்பனையாகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.
மேலும் பல்வேறு தொழில்களும் முடங்கி உள்ளதால், தொழில்துறையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்.
எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் காரணத்தால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதனிடையே கடந்த வாரம் முதல் தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில் மீண்டும் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து ரு.4,975-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.576 உயர்ந்து ரூ.39,800-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ. 2.70 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500-க்கும் விற்பனையாகிறது.