லூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

இந்தநிலையில், கடலூருக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் என்எல்சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி காசோலை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.

நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்றியப்படுகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட​லூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட​லூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.687 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 812 கிராமங்களில் கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணி நடைபெற்று வருகிறது,’ எனத் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே