கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க நேரிடும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கை தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உய்ரநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “கொரனோ இரண்டாவது அலை தீவிரமடைய தேர்தல் ஆணையமே காரணம்.

கொரோனா 2ஆம் அலையால் ஏற்படும் உயிரிழப்பு கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. தேர்தல் பரப்புரை நடந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரச்சாரம் செய்ததே கொரோனா பரவலுக்கு காரணம். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.

சுகாதார செயலாளர் , இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே