கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்..!!

இந்தியாவுக்காக பிரார்த்தனைகள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுவருகிறது. உலகிலேயே அதிக அளவில் கொரோனா பாதித்த நாடாக உள்ள இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை விபத்துகள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பல பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் இந்தியா மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இந்தியாவுக்காக பிரார்த்தனைகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே 2700க்கும் அதிமானோர் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளனர். 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே