சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து

சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த X பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிர அரசு விலக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கக்கூடிய முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த மறு ஆய்வினை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த X பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவிற்கு வழங்கப்பட்டுவந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி துப்பாக்கி ஏந்திய 6 வீரர்கள் உள்ளிட்ட 8 வீரர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

இதே போல உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக், முன்னாள் பாஜக அமைச்சர்கள் ஏக்நாத் கட்சே, ராம் ஷிண்டே, மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிக்காம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தரம் குறைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே