வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் 30 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கில் நகர்ந்து செல்லும் என்றும் அவர் கூறினார்.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்ட மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காஞ்சிபுரம், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே