அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இது குறித்து முக்கிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும்.
வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து முக்கிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை அமைச்சர் :
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. பொது மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
நிதிஷ் குமார் – பீகார் முதல்வர் :
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்துக்கு சாதகமான தீர்ப்பு. இதுகுறித்து வேறு எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே மக்களிடம் நான் கேட்டுக்கொள்வதாகும்.
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் :
அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமைதி காக்க வேண்டும்.
ஸஃபர்யாப் ஜிலானி – சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் :
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் ஆனால் நாங்கள் திருப்தியடையவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.
கார்த்திக் சோப்ரா – நிர்மோஹி அகாரா அமைப்பின் செய்திதொடர்பாளர் :
நிர்மோஹி அகாராவின் 150 ஆண்டுகால போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து ராமர் கோவில் கட்டுவதற்கு நிர்மோஹி அகாராவிற்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.