சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு முதல்வர் பழனிசாமி ரூ.75 லட்சம் நிதியுதவி

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்காக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கப்படும் நிலையில், இது தொடர்பாக விழா இயக்குனர் தங்கராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர்கள் மோகன், மனோபாலா உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது திரைப்பட விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அப்போது 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திரைப்பட விழா குழுவினரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே