HDFC வங்கி பயன்படுத்துறீங்களா ? எல்லாமே இனி Whatsapp தான் !!

இணையத்தின் உதவியோடு உலகின் எல்லை வரைக்கும் நாம் சென்று வர முடியும். அப்படி சென்று வர நமக்கு மிக உதவியாக இருப்பது ஸ்மார்போன்கள் தான்.

ஆனால் அதை இன்னும் எளிதாக்கும் விதமாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் வலம் வருகின்றன.

அதிலும் தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாகி வரும் வங்கித் துறைக்கு, இது பெரும் உதவியாகவே இருந்து வருகிறது எனலாம்.

ஏனெனில் வங்கிக்கு சென்று க்யூவில் நின்று பணத்தினை எடுத்து, அதன் பிறகு செலவு செய்வது என்பது பழைய கதையாகிவிட்டது.

தற்போதெல்லாம் இணைய வங்கி, மொபைல் வங்கி என பல வசதிகள் உள்ளன.

ஆனால் அதில் பெறும் சேவைகளை விட இன்னும் எளிதாக மக்களுக்கு சென்று அடையும் வகையில், ஹெச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ் அப்பில் சேவைகளை கொடுத்து வருகிறது.

அதன் மூலம் பல சேவைகளையும் அளித்து வருகிறது. அதனை பற்றித் தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.

இன்றைய நாளில் ஸ்மார்ட்போன் இல்லாதோர் இல்லை எனலாம்.

அதிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தாதோர் மிக குறைவாக உள்ளனர்.

இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஹெச்டிஎஃப்சி வங்கி, வங்கி சேவையை இன்னும் எளிதாக்கும் விதமான இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எனலாம்.

இது பழைய சேவை தான் எனினும் இன்றளவிலும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி முதலில் இந்த வாட்ஸ் அப் சேவையில் எப்படி உங்களை இணைத்துக் கொள்ளலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 7065970659 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது SUB என்ற மெசேஜ்ஜினை வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்பலாம்.

இதன் மூலம் உங்கள் வாட்ஸ் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கி சேவையினை பெற முடியும்.

சரி என்னென்ன சேவைகள் இந்த வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும்.

ஹெச்டிஎஃப்சி வழங்கும் வாட்ஸ் அப் சேவையில் வங்கி கணக்கு இருப்பு (account balanace), அதாவது உங்களது பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும்.

அதோடு கிரெடிட் கார்டு நிலுவை (credit card outstanding balance) தொகை ஆகியவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டும் அல்ல இன்னும் பல சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற முடியும். குறிப்பாக ஐஎப்எஸ்சி கோடு, வங்கி விடுமுறை நாட்கள் என பலவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இது வங்கி விடுமுறை நாட்களிலும் கூட சில அடிப்படை சேவைகளை பெறுவதற்கு மிக முக்கியமாக உதவும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ் அப் வங்கி சேவை மூலம் சேமிப்பு கணக்கில் பேலன்ஸினை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

அதோடு மினி ஸ்டேட்மென்ட்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதோடு இணைய வங்கியில் உள்ளதைப் போலவே ஸ்டேட்மென்ட் மற்றும் செக் புக்கிற்காக விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை கூட நாம் இதில் இருந்து விண்ணபித்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகை மற்றும் கார்டு ஸ்டேட்மென்டை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் எஃப்டி சம்மரி மற்றும் வீட்டுக் கடன், வாகன கடன் பெற என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் போன்ற சேவைகளையும் இதில் அறிந்து கொள்ள முடியும்.

அதோடு முக்கியமான அப்டேட்ஸ் மற்றும் அலர்டுகளை இதன் மூலம் பெற முடியும்.

சரி எப்படி இதில் நான் எப்படி இணைத்துக் கொள்வது? இந்த சேவையில் பதிவு செய்வதற்கு ஒருவர் 7065970659 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது SUB என்ற குறுஞ்செய்தியினை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு 7065970659 என்ற எண்ணினை உங்களது காண்டக் லிஸ்டில் சேர்த்து பின்னர் HI என்று அனுப்பவும்.

ஆக இப்படி ஒரு முறை நீங்கள் பதிவு செய்து கொண்டாலே போதும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு வேளை இந்த சேவை உங்களுக்கு வேண்டாம் என்றாலும் UNSUB என்று டைப் செய்து 7065970659 என்ற எண்ணிக்கு செய்தி அனுப்பலாம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே