அரை நிர்வாண உடல் ஓவியம்: போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு

கடந்த ஜூன் மாதம் ரெஹானா பாத்திமா என்ற பெண் குழந்தைகளை வைத்து, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, முகநூளில் வீடியோவை வெளியிட்டார்.

மேலும் சர்ச்சைக்குரிய வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

கேரள மாநிலத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பத்தனம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா காவல்துறையினரிடம், ரெஹானா பாத்திமாவின் சர்ச்சைக்குரிய வீடியோவைக் காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் கைதாகாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் ரெஹானா முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் கேரள ஐகோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், ‘இது ஆபாசத்தை பரப்பும் செயல்.

நீங்கள் இதை ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம். ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்?

இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த செயலிலிருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்?,’ என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இந்த மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்துவிட்டது. ஆதலால், மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என அதிரடியாக அறிவித்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே