திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு கரோனா அச்சம் காரணமாக வெளியூர் பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்ப்ட்டுள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபம் விசேஷமாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கன பக்தர்கள் கிரிவலம் சென்று பின் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதேபோல தீபம் அன்று மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

நாளை கார்த்திகை தீபம் என்பதால் அதிகாலையிலேயே கோவில் திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். 

அடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

6 மணி அளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்கதர்களுக்கு அருள் தருவார்.

அதன்பிறகு அகண்டதீபம் மலை உச்சியில் ஏற்றப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று முதலே கோவிலுக்கு வரும் வெளியூர் பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மகாதீபம் ஏற்றப்படுவதை காணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே