சிகிச்சைக்காக விழுப்புரம் வந்த பேரறிவாளன்..!!

பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வரும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சேர்ந்த பேரறிவாளன், தற்போது பரோலில் வெளியே வந்து வீட்டில் தங்கியுள்ளார்.

இவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று பிரச்னை உள்ளதால், இவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சனிக்கிழமை மாலை மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இரு தினங்கள், இந்த மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற உள்ளதாகவும்; சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. 

இவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் வந்திருந்தார்.

இதனால் அந்த மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே