21 ஆண்டுகளுக்கு பின் உதவியாளரை திருமணம் செய்த மூதாட்டி..!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே 21 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்தவரை முதியோர் இல்லத்தில் வைத்து மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லட்சுமி அம்மாள் என்பவருக்கு சமையல் காண்ட்ராக்டர் ஜி.கே.கிருஷ்ணய்யருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

இறப்பதற்கு முன் தனது மனைவியையும், சமையல் பணியையும் தன்னிடம் உதவியாளராக வேலைபார்த்த கோச்சானியானிடம் கவனித்துக்கொள்ள ஒப்படைத்தார்.

இதையடுத்து சமையல் பணியில் கிடைக்கும் வருமானம் மூலம் தனது செலவுகளையும், லட்சுமி அம்மாளின் வீட்டு செலவுகளையும் கோச்சானியான் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி அம்மாளின் உடல் நிலை மோசமானதால் அவரை கவனிக்க வழியில்லாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.

திருமணம் கூட செய்யாமல் இருந்த கோச்சானியான் முதியோர் இல்லம் சென்று லட்சுமி அம்மாளை அவ்வப்போது சந்தித்துள்ளார்.

கோச்சானியானும், லட்சுமி அம்மாளும் ஒருவருக்கு ஒருவர் மீது கொண்டுள்ள அன்பில் நெகிழ்ந்த முதியோர் இல்ல நிர்வாகிகள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர்.

இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், உறவினர்கள், முதியோர் இல்ல நிர்வாகிகள் முன்னிலையில் படு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே