நட்பு பாராட்டவும் தெரியும், பிரச்னை என்றால் பதிலடி கொடுக்கவும் தெரியும் – #MannKiBaat நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

நமது நாட்டுடன் யாரும் மோத முடியாது, லடாக் எல்லையில் சீனாவுக்கு சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

மன் கீ பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இன்று மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்த ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக அடுத்து வரக்கூடிய நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை.

பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல், லடாக், கொரோனா என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள்.

கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.

அனைத்து சவால்களில் இருந்தும் இந்தியா மீண்டு வந்துள்ளது. கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடி கொடுக்கவும் தெரியும். இந்தியா எப்போதும் நட்புறவை விரும்பும் நாடு. இப்போதும் அப்படி தான் இருக்கிறோம்.

ஆனால் தாய்நாட்டுக்கு துன்பம் தந்தால் அதை அனுமதிக்க முடியாது. லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.

தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர். நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தற்சார்பு பொருளாதார நடவடிக்கைக்கு மக்கள் பேராதரவு தருகின்றனர்.

சுய சார்பு நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஊரடங்கு தளர்வில் 2 விஷயங்கள் மிக முக்கியமானவை. கொரோனாவை வீழ்த்தவேண்டும் மற்றொன்று பொருளாதார நடவடிக்கை என தெரிவித்தார். 

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் மற்றவர்கள் துன்பப்படுவர்.

எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு முடிந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே