இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடக்கிறது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 284 ரன்கள், இங்கிலாந்து 181 ரன்கள் எடுத்தன. தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பர்ன்ஸ் நீண்டநேரம் நிலைக்கவில்லை. டென்லே ஏமாற்றினார்.
கேப்டன் ஜோ ரூட் ஓரளவு கைகொடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது.
இந்த வெற்றியின் மூலம் செஞ்சுரியனில் கடைசியாக பங்கேற்ற 6 டெஸ்டிலும் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்க அணி தனது ஆதிக்கத்தை தொடர்கிறது.
அதே நேரம் இங்கிலாந்து அணி கடைசியாக அந்நிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தொடர்ந்து ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.
மேலும் பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.