திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் எடையுள்ள பூக்களை கொண்டு புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 8 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் சதுர்வேத பாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் கொலு வைக்கப் பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, மல்லி, முல்லை, தாழம்பூ, ரோஜா உள்ளிட்ட 12 வகையான மலர்களைக் கொண்டும் துளசி மருவம் வில்வம் போன்ற இலைகளைக் கொண்டு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது .

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஏழுமலையான் கோவில் ஒருபுறமும் வெளிப்புறத்திலும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே