கோவிட் தடுப்பூசி; எண்ணிக்கை 6.05 கோடியாக உயர்வு

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.05 கோடியாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிக பட்சமாக தினசரி கோவிட் பாதிப்பு 40,414 ஆக உள்ளது. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக உள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர், கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே