சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 4 பேர் இன்று (மே 08) உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில், ஒவ்வொரு நாளும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று மட்டும் சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பதிவான

பெரும்பாலான வழக்குகள் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கீழ்பாக்கம் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்கனவே உடல்நல பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் ராயப்பேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி, திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் இன்று உயிரிழந்தார்.

மூதாட்டியின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் கொரோனா உறுதியாகியது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு சந்தை வியாபாரி உட்பட மேலும் ஒருவர் என இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 14 தீயணைப்பு துறை வீரர்களுக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே