முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?? மத்திய அமைச்சர் மறுப்பு..!!

மத்திய சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்தார்.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை அவர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரகாஷ் ஜவ்டேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வரக்கூடிய சட்ட மன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும்.

நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால், பாஜகவே ஒரு குடும்பம் தான் என்றார்.

மேலும், கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 

பாஜக ஆட்சியில் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது.

6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை தாங்களே அதிக விலைக்கு விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா என செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கவில்லை. தொடர்ச்சியாக செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பிய போதும் அவர் அதற்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

தங்களது கட்சிக்கு என சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி கட்சி தலைமை தான் அறிவிக்கும். அதை தான் மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே