கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது.

அதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அளித்த பேட்டியில் பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியமானது.

அதனால் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

இதையெடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டால் 10-ம் வகுப்பு தேர்வை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.

தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே