இந்தியாவில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26,115 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,35,04,534

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 26,115

இதுவரை குணமடைந்தோர்: 3,27,49,574

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 34,469

கரோனா உயிரிழப்புகள்: 4,45,385

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 252

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,09,575

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 81,85,13,827

நேற்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 96,46,778

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே