Airtel to BSNL: மாதத்திற்கு 300GB – 500GB டேட்டா; லாக்டவுனுக்கு ஏற்ற 6 பெஸ்ட் பிளான்கள்!

ரூ.1000 க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல், ஆக்ட் ஃபைபர்நெட் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் இதோ.
இன்று போய் நாளை வா என்பது போல லாக்டவுன்கள் முடிந்த பாடில்லை. இதனாலேயே மக்கள் பல்வேறு காரணங்களுக்காக மொபைல் நெட்வொர்க்குகளை விட பிராட்பேண்ட் இணைப்புகளை தேட ஆரம்பித்துள்ளனர்.
பிராட்பேண்ட் இணைப்பானது மொபைல் நெட்வொர்க் போல் இல்லாமல் அதிக நிலைத்தன்மையாகவும் வேகமாகவும் இருக்கும் உடன் மிகவும் பாதுகாப்பானவையும் கூட. அதே சமயம் பிராட்பேண்ட் சேவையானது விலை உயர்ந்தவையும் கூட. இவை 4 ஜி நெட்வொர்க்குகளை விட சிறந்தவை என்றாலும், அவை மிகவும் விலை உயர்ந்தவை. ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகள் இன்னும் விலை உயர்ந்தவை.

மிகவும் விலையுயர்ந்த சேவை என்கிற ஒரே காரணத்திற்காகவே நீங்கள் பிராட்பேண்ட் திட்டத்தை விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஏர்டெல், ஜியோ தொடங்கி BSNL, டாடா ஸ்கை வரையிலாக அனைத்து முன்னணி சேவை வழங்குநரிடம் இருந்தும் அணுக கிடைக்கும் ரூ.1,000 க்கும் குறைவான விலையுள்ள பிராட்பேண்ட் திட்டங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களுக்கான சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் எண்டர்டெயின்மெண்ட் பிளான்:
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இந்தியாவில் மிகவும் பிரபலமான FTTH சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஏர்டெல் தனது ஃபைபர் இணைப்பு சேவைகளை விரிவாக்குவதில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. ரூ.1,000 க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றைப் பற்றி பேசும் போது ஏர்டெல் எண்டர்டெயின்மெண்ட் திட்டமான ரூ.999-ஐ தவிர்க்கவே முடியாது. இது 200 ஜிபிபிஎஸ் வேகத்துடன் 300 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் கோல்ட் உறுப்பினர் போன்ற பிற சலுகைகளையும் நீங்கள் பெறுவீர்கள். அமேசான் ப்ரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், ZEE5 பிரீமியம் மற்றும் பலவற்றின் இலவச சந்தாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், குறிப்பிடப்பட்ட ரூ.999 என்கிற தொகையானது வரிகளை சேர்க்காத கட்டணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்ட் 75 Mbps ஸ்பீட் பிளான்:
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு பிரபலமான இணைய சேவை வழங்குநரான ACT நிறுவனம் ரூ.985 என்கிற மாத வாடகைக்கு ‘ஆக்ட் ரேபிட் பிளஸ்’ திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், மாதத்திற்கு 350 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்ட டேட்டாவை தீர்த்துவிட்டால், உங்கள் இணைய வேகம் 512 Kbps ஆக குறையும். இந்த திட்டத்துடன் வேறு எந்த நன்மைகளும் சேர்க்கப்படவில்லை.

ஆக்ட் 40 Mbps ஸ்பீட் பிளான்:
ரூ.1000 என்கிற பட்ஜெட்ற்குள் கிடைக்கும் மற்றொரு ஆக்ட் நிறுவனத்தின் திட்டமும் உள்ளது. அது ACT ஸ்விஃப்ட் ஆகும். இது 200 ஜிபி என்கிற மாதாந்திர டேட்டாவை 40 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கேள் வழங்கும். உங்கள் மாத டேட்டா வரம்பு தீர்ந்தவுடன், இணைய வேகம் 512 Kbps ஆக குறையும். இந்த திட்டத்தின் மாத வாடகை ரூ.710 ஆகும்.

பிஎஸ்என்எல் பிபி ஹோம் காம்போ யுஎல்டி 900
பிஎஸ்என்எல் பிபி ஹோம் காம்போ யுஎல்டி 900 திட்டமானது மாதத்திற்கு ரூ .900 என்கிற கட்டணத்தை கீழ் வாங்க கிடைக்கிறது. பிஎஸ்என்எல்லின் இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம், முதல் 15 ஜிபி டேட்டா வரை உங்களுக்கு 10 எம்பிபிஎஸ் வேகம் வழங்கப்படும். பின்னர் குறிப்பிட்ட 15 ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர் இணைய வேகம் 2 எம்.பி.பி.எஸ் என்று குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் வரம்பற்ற அழைப்போடு லேண்ட்லைன் இணைப்பையும் பெறுவீர்கள்.
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சூப்பர் ஸ்டார் 500
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சூப்பர் ஸ்டார் 500 திட்டமானது ரூ.949 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இது 50 ஜிபிபிஎஸ் வேகத்தின் கீழ் மாதத்திற்கு 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. குறிப்பிட்ட 500 ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர் உங்கள் இணைய வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆக குறையும். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழும் வரம்பற்ற அழைப்போடு லேண்ட்லைன் வசதியையும் பெறுவீர்கள்.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் ரூ.950 வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டம்
இந்தத் திட்டத்துடன் நீங்கள் பெறும் முதல் மற்றும் முக்கிய நன்மை என்னவென்றால், மாதம் முழுவதும் வரம்பற்ற டேட்டா நன்மையே. இந்த திட்டத்தின் இணைய வேகம் 25 எம்.பி.பி.எஸ் ஆகும் . இது ஒன்றும் மிக அதிகமாக இல்லை என்றாலும் கூட, அதே சமயம் மிகவும் மோசமானதும் அல்ல. இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் ஒரு இலவச ரவுட்டர் மற்றும் safe custody போன்றவைகளையும் பெறுவீர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே