தமிழகத்தில் 48 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்கள் சுமார் 48 மணிநேரத்தில் சோதனை நடத்தியதில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 934 அரிவாள்கள், 5 துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளன.

நன்னடத்தைக்காக பிடியாணை பெறப்பட்டு 1,927 ரவுடிகள் விடுவிக்கப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல்துறை டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் போதே படிப்படியாக குற்றங்கள் குறைக்கப்படும். காவல்துறை பொதுமக்களுக்கு நண்பனாக செய்லபடும் என்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளார்.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் குற்றங்களை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே