அமெரிக்காவில் நடைபெறும் போராட்டத்துக்கு கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆதரவு

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் கூகுள் துணை நிற்கும் என அமெரிக்காவில் நடைபெறும் போராட்டத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.

கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டின் படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும். இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாக பகிர்ந்து கொள்கிறோம். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களுக்கு, நீங்கள் தனியாக இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே