தங்கக்கடத்தல் விவகாரம் : ஸ்வப்னா சுரேஷை கொச்சி அழைத்து வந்தது NIA

தங்க கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னாவை கடந்த இரண்டு நாட்களாக கேரள போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அதிரடியாக பெங்களூரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இன்று காலை அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் அவர் கொச்சி தேசிய புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக காரில் கொச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென தமிழக கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடி அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த கார் பஞ்சர் ஆனது.

இதனை அடுத்து கேரள அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டு மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த வாகனத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கேரளா நோக்கி சென்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் கொச்சி தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தங்க கடத்தல் வழக்கு குறித்து அவரிடம் விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும்; விறுவிறுப்பாக இந்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது. 

இன்றைய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் ஸ்வப்னாவிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே