சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகிறது. பொதுமுடக்கக் காலத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அச்சமயம் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்திருந்ததே அதற்கு காரணம்.
தற்போது இயல்பு நிலை திரும்பி இருப்பதால், முதலீடுகள் குறைந்து தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,340க்கு விற்பனையாகிறது.
அதன் படி, சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.34,720க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.34,720க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,300க்கும் விற்பனையாகிறது.