கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்..!!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்பு, அனைத்து விதமான விவாதங்கள் நடந்து முடிந்து, இந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்படாமல் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய அரசு நிரந்தரம் செய்ய வேண்டும்.

வழக்கு தொடர்ந்த தற்காலிக ஊழியர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சங்கங்களிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும்.

தமிழக அரசு இன்னும் எட்டு வார காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே